செய்திகள் :

வைரலாகும் டைசன் : கழுத்தில் தங்க செயினுடன் நகைக்கடையை பாதுகாக்கும் நாய்!

post image

நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவதோடு மட்டுமல்லாது பாதுகாப்புக்காகவும் வளர்க்கப்படுவது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நாய் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

உன்னாவ் நகரில் உள்ள காந்தி நகரில் இருக்கும் ராதாகிருஷ்ணா ஜூவல்லரியில் செக்யூரிட்டிக்கு ஆட்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக அங்கு ஒரு நாய்தான் கம்பீரமாக உள்ளேயும், வெளியேயும் வலம் வருகிறது.

நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்த நாயை பார்த்தவுடன் மிரளத்தான் செய்கின்றனர். ஆனால் டைசன் என்ற அந்த நாய் யாரையும் கடிப்பதில்லை. மாறாக கடைக்கு வருபவர்களை மோந்து பார்த்தே அவர்களை அடையாளம் காண்கிறதாம்.

இந்த வளர்ப்பு பாதுகாவலரை கடை உரிமையாளர் கிருபாசங்கர் ஜெய்ஸ்வால் தனது சொந்த கிராமத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். மனித செக்யூரிட்டிகள் கையில் துப்பாக்கியுடன் இருப்பது வழக்கம். ஆனா டைசன் கையில் துப்பாக்கி இல்லை. மாறாக அந்த நாய் கழுத்தில் 50 தோலா எனப்படும் தங்க செயின் நாயின் கழுத்தை அலங்கரிக்கிறது. அத தங்க செயின் மதிப்பு இப்போது 50 லட்சம் இருக்கும்.

கடை உரிமையாளர் கிருபாசங்கர் இது குறித்து கூறுகையில், ''கடைக்கு உள்ளேயும், வெளியேயும் டைசன் தான் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறான். வாடிக்கையாளர் மாதிரி திருடன் வந்தால் அவர்களை கண்டுபிடித்துவிடுவான். கடையை சுற்றி திரியும் வெளியாட்களை டைசன் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பான்'' என்றார்.

ஆனால் நாய் கழுத்தில் கிடக்கும் தங்க செயின் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். டைசன் நகைக்கடையில் கழுத்தில் தங்க செயினுடன் பாதுகாப்பு பணியில் ரோந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Apollo: தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி கொண்ட சென்னை அப்போலோ

சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள், பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் தனது 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ (Apollo Advanced Stroke Network)-ஐ விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சிறுநீரகப் பிரச்னையுடன் தமிழக விவசாயிகள்; எச்சரிக்கும் சர்வதேச மருத்துவ இதழ்!

அரை நூற்றாண்டுக்கு முன்புவரை நீரிழிவு, புற்றுநோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களை மிக மிகக் குறைவாகத்தான் கண்டு வந்தோம். ஆனால், இப்போதோ இந்த வாழ்வியல் பிரச்னைகளால் பாதி... மேலும் பார்க்க

Grokipedia: விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்பீடியா - எலான் மஸ்கின் திட்டம் என்ன?

அரசியல் முதல் வரலாறு வரை எது பற்றிக் கேட்டாலும் விக்கிபீடியாவில் அனைத்தும் கிடைக்கும். சில நிமிடங்களில் ஒரு தகவல் குறித்த அடிப்படையான தகவல்களை தெரிந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் ... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் குதிரை, ரூ.23 கோடியில் எருமை! - புஷ்கர் கண்காட்சியில் கவனம் ஈர்த்த விலங்குகள்

ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சி, இந்த ஆண்டும் களைகட்டியது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் முக்கிய நட்சத்திரங்களாக ரூ.15 கோடி மதிப்புள்ள... மேலும் பார்க்க

700 மரங்களுடன் ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு: ஏரி முதல் திறந்த தியேட்டர் வரை சுவாரஸ்ய ரகசியங்கள்!

பாலிவுட் நடிகர்கள் அனைவருக்கும் மும்பைக்கு வெளியில் பண்ணை வீடுகள் உள்ளன. ஷாருக் கானுக்கு மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக்கில் பண்ணை வீடு உள்ளது. சல்மான் கானுக்கு மும்பை அருகில் பன்வெல் என்ற இடத்... மேலும் பார்க்க

பசும்பொன் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழா கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று காலை கணபதி ஹோமம் மற்றும் முதல் கால பூஜையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க