தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன் ஆழப்புழாவிலுள்ள ரிசார்ட் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, மலையாள சினிமா பிரபலங்களுக்கு கஞ்சா விற்பனை செய்த்தாக ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து, அவர் குறிப்பிட்ட நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி மற்றும் இளம் மாடல் நடிகை சௌம்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் கலால் துறை அதிகாரிகள் நேற்று (ஏப். 28) நடத்திய 10 மணிநேர விசாரணையில் மூன்று பேருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இவர்கள் தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாட்டில் இருப்பது உறுதியானது.
இந்த நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவை தொடுபுழாவிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கலால் அதிகாரிகள் சேர்த்துள்ளனர். குடும்பத்தினரின் ஒப்புதலுடனே இது நடந்துள்ளது.
அங்கு, சாக்கோ சில மாதங்கள் சிகிச்சையில் இருப்பார் என்றும் அவர் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் கலால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீநாத் பாசி மற்றும் சௌம்யா ஆகியோரை விசாரணையிலிருந்து விடுவித்துள்ளனர். தேவைப்பட்டால், இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் இம்மூவருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றும் கலால்துறை துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்! நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்