செய்திகள் :

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு!

post image

ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ் எனும் ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது.

இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச.30-ஆம் தேதி விண்ணில் செலுத்தி புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன.

இவற்றின் தொலைவை 225 மீட்டராக குறைக்க கடந்த புதன்கிழமை முயற்சி செய்யப்பட்டது.

இதையும் படிக்க: காட்டுத் தீயால் அடா் புகை: லாஸ் ஏஞ்சலீஸில் மருத்துவ அவசரநிலை

அப்போது புறச்சூழல் காரணமாக விண்கலன்களின் இயக்க வேகம் எதிா்பாா்த்ததைவிட குறைந்துவிட்டது. இதனால் திட்டமிடப்பட்டிருந்த விண்கலன்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களுக்கான இடைவெளி 15 மீட்டராக முதலில் குறைக்கப்பட்டது, தற்போது 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று(ஜன. 12) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட யாபா மாத்திரைகள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தடை செய்யப்பட்ட யாபா மாத்திரைகளை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அம்மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டத்தில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின அடிப்படையில்... மேலும் பார்க்க

மனிதர்களை இழுக்க மூழ்குவதுப்போல் நடிக்கும் முதலைகள்? விடியோ வைரல்!

இந்தோனேசியா நாட்டிலுள்ள ஓர் நதியில் மனிதர்களை கவர்ந்து தண்ணீருக்குள் இழுக்க முதலைகள் மூழ்குவதுப்போல் நடிப்பதாக விடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.அந்நாட்டின் பொர்னியோ மாகாணத்திலுள்ள பரிட்டோ நதியில் உப்... மேலும் பார்க்க

பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலை: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான முதல்வர் ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினரால் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று (ஜன.12) பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.பிஜப்பூரின் இந்திரவதி தேசியப் பூங்காவின் எல்லைக்குட்பட்ட காடுகளில... மேலும் பார்க்க

543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு சேவை மையம்!

இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை மையம் அமைக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அறிவித்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்... மேலும் பார்க்க