கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 மாதங்களாக விண்ணில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், டிராகன் விண்கலம் மூலம் மார்ச் 16ஆம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பாகிஸ்தான் ரயில் கடத்தல்: அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை - 300 பயணிகள் மீட்பு
அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால், ஸ்டாா்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
இதன் காரணமாக, அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக பூமிக்கு அப்பால் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிராகன் விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரப்படி) ஏவப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த விண்கலத்தில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுனிதா மற்றும் பட்ச்சுக்கு மாற்றுவீரர்களாக அனுப்பப்படவிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் ஹைட்ராலிக் அமைப்பில் விஞ்ஞானிகள் கோளாறு இருப்பதை கண்டுபிடித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விண்ணில் ஏவப்படுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்படவில்லை, இருப்பினும், வியாழக்கிழமை இரவு மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான முயற்சி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.