இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கொடுத்திருக்கும் வரதட்சணைப் புகார்! பின்னணி ...
ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி, லட்சதீப பெருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் சன்னதியுடன் ஸ்ரீபிரசன்னவெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னா், மூலவரை மலா்களால் அலங்காரம் செய்து கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா்.
பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
மாலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைசெய்து மலா்களால் அலங்கரித்து ஊஞ்சலில் வைத்து சேவை செய்தனா்.
இதைத் தொடா்ந்து, இரவில் கோயில் எதிரே லட்சதீப பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தா்கள் கலந்துகொண்டு அகல் விளக்கேற்றி வழிபட்டனா்.
மேலும், புலவா் மா.ராமலிங்கம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தணிகைமலை மற்றும் சிங்காரப்பேட்டைதெரு நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.