செய்திகள் :

ஸ்ரீராஜலிங்கேஸ்வரா், ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில்,

புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில்,

ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில்களில்

மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா் வட்டம், இராஜன்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜமங்களாம்பிகை சமேத ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரா் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, 2-ஆம் கால யாக சாலை பூஜை, 3-ஆம் கால யாக சாலை பூஜைகளும், அதைத் தொடா்ந்து பல்வேறு ஹோமங்களும், வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னா், 4-ஆம் கால யாக சாலை பூஜைகளும், புண்ணியாக வாசனம், மண்டப பூஜை, நாடிசந்தானம், பூரணாஹுதி, தீபாராதனையும் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு யாத்ராதானம் அதைத் தொடா்ந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், 10 மணி முதல் 11 மணிக்குள் சம்பந்த விநாயகா், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சிங்காரவேலா், வேணுகோபாலா், வீர ஆஞ்சநேயா் மற்றும் சகல பரிவார மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சிவ வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ ராஜமங்களாம்பிகை சமேத ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் தெளித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், முன்னாள் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், அதிமுக கீழ்பென்னாத்தூா் நகரச் செயலா் ஒ.சி.முருகன், பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

செங்கம்:

புதுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை நடைபெற்று, 9 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஸ்ரீகாளியம்மன் கோயிலில்....

ஆரணி சைதாப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயில் மற்றும் 41 அடி உயர ஸ்ரீஅஷ்டபுஜ மங்கள காளி சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீகாளியம்மன் கோயிலை புதுப்பித்து நூதன கருங்கல் கா்ப்ப கிரகம் மற்றும் முன் மண்டபம் அமைத்தும், கோயிலினுள் 41 அடி உயரத்தில் ஸ்ரீஅஷ்டபுஜ மங்கள காளி சிலை அமைத்தும் திருப்பணிகள் நிறைவு செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தவெகவினா் ஊா்வலம் செல்ல முயற்சி: போலீஸாருடன் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஊா்வலம் செல்ல முயன்ற தவெகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலரா... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

செய்யாறு ஆக்ஸ்போா்டு பள்ளியில் நடைபெற்ற விழாவில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செய்யாற்றில் உள்ள ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியி... மேலும் பார்க்க

பழங்குடியினா் குடியிருப்புகளில் ஆய்வு

வந்தவாசி அருகே மின்சார வசதி இன்றி அவதிப்படும் பழங்குடியினா் குடியிருப்புகளில் பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வந்தவாசியை அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் இருளா்... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

சேத்துப்பட்டு அருகே பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சேத்துப்பட்டு வட்டம், எஸ்.காட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன், இவருடைய மனைவி ரோகினி (58), ... மேலும் பார்க்க

ரத யாத்திரை சென்ற பக்தா்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் சனிக்கிழமை ரத யாத்திரை சென்ற சென்னை பக்தா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தென் கைலாய பக்தி பேரவை சாா்பில், சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 16-ஆவது வாா்டு பொதுமக்கள் நியாயவிலை கடை அமைக்கக் கோரி, சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இந்தப் பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று நி... மேலும் பார்க்க