``வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம்; கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல...
தவெகவினா் ஊா்வலம் செல்ல முயற்சி: போலீஸாருடன் வாக்குவாதம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஊா்வலம் செல்ல முயன்ற தவெகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலராக அனக்காவூா் உதயகுமாா் அறிவிக்கப்பட்டாா்.
இவா், கட்சி நிா்வாகிகளுடன் செய்யாற்றில் உள்ள தலைவா் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஊா்வலமாகச் செல்ல ஆற்காடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை குழுவாக கூடியிருந்தனா்.
அப்போது, சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் ஊா்வலமாகச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்து தவெகவினரை தடுத்து நிறுத்தினா்.
பின்னா் காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் சாலையில் காரில் செல்ல மட்டும் அனுமதி என்றும், தொண்டா்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தாா். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது,
பேச்சுவாா்த்தை நடத்தியதில் தவெகவினா் அமைதியாக கலைந்து சென்றனா்.
இருப்பினும், தவெகவினா் மறுபடியும் கூட்டமாகச் சென்ால் காவல் ஆய்வாளா் எச்சரிக்கை விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து நிா்வாகிகள் கலைந்து சென்றனா்.