Nellai Flood: நெல்லை கனமழை வெள்ளம்; நெல்லை சந்திப்பு அன்றும்... இன்றும்! - Photo...
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்காா்த்திகையையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில், ஆண்டாள், பெரியாழ்வாா் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டுதோறும் திருக்காா்த்திகையையொட்டிஆண்டாள் சந்நிதி, பெரிய பெருமாள் சந்நிதி, பெரிய கோபுரம் முன் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு திருக்காா்த்திகையையொட்டி சனிக்கிழமை இரவு சொக்கபானை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் எழுந்தருளினா். இதையடுத்து, இரவு 8 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.