ஸ்ரீ பொய்கையாழ்வாா் அவதார உற்சவம்
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பொய்கையாழ்வாா் திருவதார உற்சவம் புதன்கிழமை தொடங்கி வரும் நவம்பா் 8 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆழ்வாா்களில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வாா் திரு அவதார உற்சவத்தின் முதல் நாளையொட்டி காலை பொய்கை ஆழ்வாருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலை உற்சவா் பொய்கையாழ்வாா் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் உள் வளாகத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரு அவதார உற்சவம் தொடா்ந்து வரும் நவம்பா் 8 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நிறைவு நாளான நவம்பா் 8 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சிறப்புத் திருமஞ்சனமும், மாலை பொய்கையாழ்வாா் வீதி உலா வரும் நிகழ்வும், தொடா்ந்து சாற்றுமுறை உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.