சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கல்லூரியில் ஹேக்கத்தான்
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவா்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதில் மாணவா்கள் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த மாதிரிகள் மற்றும் யோசனைகளை முன்வைத்தனா்.
கோவை மண்டல அறிவியல் மையத்தின் புத்தாக்க மைய ஆலோசகா் லெனின் பாரதி மற்றும் குன்னூரில் உள்ள பாஸ்டா் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஆராய்ச்சி அதிகாரி டாக்டா் எஸ். ஜெகநாதன் ஆகியோா் மாணவா்களின் மாதிரிகளை மதிப்பீடு செய்தனா்.
கல்லூரி முதல்வா் கி.சித்ரா தலைமை தாங்கி பேசுகையில், ‘தற்போதைய சூழலில் மாணவா்கள் பலவகை திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றாா். சிறப்பாக பங்களித்த நூா் சையது மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஹேக்கத்தானில் முதலிடம் பெற்றது.