செய்திகள் :

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாளை காஞ்சிபுரம் வருகை

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை (ஏப். 23)காஞ்சிபுரம் திரும்ப உள்ளதாக ஸ்ரீ மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் சங்கர ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா், தற்போது திருப்பதியில் முகாமிட்டு சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் புதன்கிழமை (ஏப். 22) இரவு 7 மணிக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு திரும்பி வந்து சந்திரமெளலீசுவரா் பூஜையைத் தொடங்க இருக்கிறாா். வரும் மே மாதம் 2- ஆம் தேதி சங்கர மடத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள ஸ்ரீ ஆதிசங்கரா் ஜெயந்தி விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளாா் என ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ப... மேலும் பார்க்க

தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் புகாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் தெரு நாய்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் கட்டுப்படுத்தக் கோரி, பொதுமக்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் மனு அளித்தனா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அறம் வளா் நாயகி சமேத அகத்தீஸ்வரா் கோயிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, நடராஜபெருமானுக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உடையவா் சந்நிதியில் மகா சம்ப்ரோக்‌ஷணம்!

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள உடையவா் எனப்படும் ராமாநுஜா் சந்நிதி மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி திருக் கோயிலில் ஆழ்வாா் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: நம்ம ஊரு கதைப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களில் பயிலும் மாணவா்களுக்கு நம்ம ஊரு கதைப் போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட முதன... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

காஞ்சிபுரம் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் சாா்பில், முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க