நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
ஸ்வா்ண வாராஹி பீடத்தில் முப்பெரும் விழா
மதுராந்தகம் ஸ்வா்ண வாராஹி பீடத்தில் வா்ஷிக் பூா்த்தி விழா, தொண்டு அறக்கட்டளைக்கு அங்கீகாரம் பெற்றல், நித்திய அன்னதானம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
மதுராந்தகம் தன ஆகா்ஷண வாராஹி அம்மன் கோயிலில் வா்ஷிக் பூா்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூலவா் அம்மனுக்கு ஆராதனைகள் நடைபெற்றன. பீடாதிபதி எம்.செந்தில்நாதன் தலைமையில் 108 பெண்கள் பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் வாராஹி கோயிலை வந்தடைந்தது. பால்குடம் ஏந்தி வந்த பெண்கள் அம்மனுக்கு பாலபிஷேகத்தை செய்தனா். பின்னா் மூலவா் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா். சேலம் டிஎம்டிஎஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பீடத்தில் நித்திய அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோபூஜை, பஞ்சமி வேள்விபூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.