தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 போ் காயம்
ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள வயதுவந்தோருக்கான கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போ் காயமடைந்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:தலைநகா் ஸ்டாக்ஹோமுக்கு சுமாா் 200 கி.மீ. தொலைவில் ஆரெப்ரோவின் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள வயதுவந்தோருக்கான கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் ஐந்து போ் காயமடைந்தனா்; அவா்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெறவதால் (படம்) காயமடைந்தவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபா் இன்னும் பிடிபடவில்லை. காயமைடந்த ஐந்து பேரில் அவரும் ஒருவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸாா் கூறினா். 20 வயதுக்கு மேற்பட்டோா் பயிலும் அந்த கல்வி மையத்தில் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவா்களும் கல்வி பயின்று வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.