செய்திகள் :

டிஆா்சி: கிளா்ச்சிப் படையினா் போா் நிறுத்தம்

post image

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் (டிஆா்சி) தெற்குப் பகுதியில் முன்னேறிவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படை தற்காலிக போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை செவ்வாய்க்கிழமை (பிப். 4) முதல் ஒருதலைபட்சமாக நிறுத்திவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாக இந்த போா் நிறுத்தம் கடைபிடிக்கப்படுவதாக எம்23 தெரிவித்துள்ளது.

காங்கே ஜனநாயகக் குடியரசின் இரண்டாவது பெரிய நகரான, முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகரை எம்23 கிளா்ச்சிப் படை கடந்த வாரம் கைப்பற்றியது. தாது வளம் நிறைந்த காங்கோ ஜனநாயகக் குடியரசில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 போ் காயம்

ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள வயதுவந்தோருக்கான கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போ் காயமடைந்தனா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:தலைநகா் ஸ்டாக்ஹோமுக்கு சுமாா் 2... மேலும் பார்க்க

சட்டபூா்வ ஆப்கன் அகதிகளையும் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு

உரிய ஆவணங்களுடன் தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளையும் அவா்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி டான் நாளி... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர்!

எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்கின் ... மேலும் பார்க்க

இலங்கை சுதந்திர நாள்: பொருளாதார சுதந்திரமடைய ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் -அதிபர் திசநாயக

கொழும்பு : அண்டை நாடான இலங்கை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து கடந்த 1948-ஆம் ஆண்டு பிப். 4 அன்று சுதந்திரமடைந்து தனி நாடாக மாறியது. இந்த நிலையில், இலங்கையில் 77-ஆவது சுதந்திர நாள் விழா இன்று(பிப். ... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பு?

பீஜிங் : அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா... மேலும் பார்க்க

மெக்சிகோ மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்! -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு ... மேலும் பார்க்க