விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் கைதான மலையாள ராப் பாடகர்! ஏன்?
ஹஜ் யாத்திரை செல்வோருக்கு மருத்துவ பரிசோதனை
திருப்பத்தூா்: தமிழ்நாடு ஹஜ் குழுவின் மூலம் தோ்வு செய்யப்பட்ட ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவா்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி திருப்பத்தூா் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்து, ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
இதில் ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் வினோத்குமாா், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.