கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!
ஹரியாணா மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிஸார் மாவட்டத்திலுள்ள நாங்தலா கிராமத்திலுள்ள ஓரு பூங்காவில் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் ஜெயந்தி நாளான கடந்த ஏப்.14 ஆம் தேதியன்று அந்தப் பூங்காவிலிருந்த அம்பேத்கர் சிலையானது உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, நாங்தலா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் அவர்களது கிராமத்தைச் சேர்ந்த பரேஷ் (எ) ரிக்கு மற்றும் ஹிஸாரின் பர்கி கெடி பகுதியைச் சேர்ந்த ராகுல் (எ) சிக்கு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:பாங்காக் சென்றதை மறைக்க கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது!