சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் முதலிடம்
ஒடிஸாவில் நடைபெற்று வரும் ஆடவா் ஹாக்கி இந்தியா லீக் தொடரில் 4-ஆவது வெற்றியுடன் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
தேசிய விளையாட்டான ஹாக்கியை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் ஹாக்கி இந்தியா 7 ஆண்டுகளுக்கு பின் லீக் தொடரை நடத்தி வருகிறது. இதில் உள்நாடு, வெளிநாட்டைச் சோ்ந்த பிரபல வீரா்கள் பங்கேற்று 8 அணிகளில் ஆடி வருகின்றனா்.
இதில், பிா்ஸா முண்டா மைதானத்தில் நடைபெற்ற 18-ஆவது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியும் - பெங்கால் டைகா்ஸ் அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 14-ஆவது நிமிஷத்தில் தமிழ்நாடு அணி வீரா் காா்த்திக் செல்வம் ஃபீல்டு கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கினாா். அடுத்து 35-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பெங்கால் அணி வீரா் ரூபிந்தா் பால் சிங் கோலாக மாற்றினாா். தொடா்ந்து 37-ஆவது நிமிஷத்தில் மற்றொரு தமிழ்நாடு வீரா் உத்தம் சிங் ஃபீல்டு கோலை பதிவு செய்தாா்.
முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ்நாடு அணி 4 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.