செய்திகள் :

ஹாட்டஸ்ட் சர்ப்ரைஸ்..! கேதிகா சர்மாவின் பாடல் விடியோ எப்போது?

post image

ராபின்ஹூட் படத்தில் இருந்து கேதிகா சர்மாவின் பாடல் விடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் நிதின் நாயகனாகவும் ஸ்ரீ லீலா நாயகியாகவும் நடித்துள்ள ராபின்ஹூட் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ‘அதிதா சர்பிரைஸ்’ எனும் பாடலுக்கு கேதிகா சர்மா கவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.

இந்தப் பாடல் நாளை (மார்ச்.10) வெளியாகவிருக்கிறது. இதனை படக்குழு ,”ஹாட்டஸ்ட் சர்ப்ரைஸ் ஆஃப் தி இயர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சேகர் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனமைத்துள்ளார்.

தெலுங்கில் வெளியான குத்துப் பாடல்கள் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளன.

இந்நிலையில் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமாகி தற்போது நடிகையாக மாறியுள்ள கேதிகா சர்மாவின் நடனத்துக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்தப் படம் வரும் மார்ச். 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

3-ஆவது இடத்தில் ரியல் காஷ்மீா்

ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீா் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய கால்பந்து சம்மேளனம் சாா்பில் இரண்டாம் நிலை அணிகளுக்கு ஐ லீக் தொடா் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிய... மேலும் பார்க்க

ஜோகோவிச், ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வி

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரா் ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா். அமெரிக்காவின் இண்டியன்வெல்... மேலும் பார்க்க

வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால... மேலும் பார்க்க

இணையத்தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!

நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். ப... மேலும் பார்க்க

46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகையும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியுமான சங்கீதா தான் கருவுற்றுள்ளதை அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். சின்ன திரை நடிகையான சங... மேலும் பார்க்க

அடுத்த படம் அஜித்துடனா? புஷ்கர்-காயத்ரி கூறியதென்ன?

இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி நடிகர் அஜித்தை இயக்குவது குறித்து பேசியுள்ளார்கள்.ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா ஆகிய படங்களை இயக்கியவர்கள் கணவன், மனைவியுமான புஷ்கர்-காயத்ரி. சுழல், சுழல் 2 இ... மேலும் பார்க்க