மீண்டும் மீண்டும்..! கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் திடீரென விழுந்த கான்கிரீட் ...
ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்ட் மீது 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லண்டன் நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியின் முன்னாள் கணவரான ரஸ்ஸல் பிராண்ட் 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இந்தக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள போர்ன்மவுத் பகுதியில் ஒரு பெண்ணையும், 2004 ஆம் ஆண்டு லண்டனின் மத்திய வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் ஒரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிராண்ட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், 2001 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை தாக்கியதாகவும், 2004 மற்றும் 2005 க்கு இடையில் மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரை மே 2 ஆம் தேதி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் யாரும் பாதிக்கப்பட்டு இருந்தால், தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஸ்ஸல் பிராண்ட் மறுத்துள்ளார்.