செய்திகள் :

ஹால் ஆஃப் ஃபேம்: தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

post image

ஐ.சி.சி.யின் பெருமைமிகு 'ஹால் ஆஃப் ஃபேம்' வரிசையில் மகேந்திர சிங் தோனி சேர்க்கப்பட்டதற்காக அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லெஜண்டரி வீரர்களுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஐசிசி சார்பில் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் நேற்று (ஜூன் 9) அறிவிக்கப்பட்டது.

அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இடம்பெற்றுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:

ஐ.சி.சி.யின் பெருமைமிகு 'ஹால் ஆஃப் ஃபேம்' வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியது தொடங்கி, அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனை படைத்து, அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்பது முதல் சென்னை அணியை 5 முறை ஐ.பி.எல். கோப்பையையும், இருமுறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வெற்றிபெறச் செய்தது வரை நீங்கள் உயர்சிறப்பான கிரிக்கெட் மரபைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள்.

உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள்! விக்கெட்கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள்! ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள்.

உங்களது பயணம் கிரிக்கெட் வரலாற்றில் தற்போது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே 'Thala For a Reason' என்ற புகழுரை ஓயாது; என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவுக்கே தலைமை.. நாட்டின் என்ஜின் தமிழகம்தான்: மு.க. ஸ்டாலின்

முருகர் மாநாட்டில் பெரியார், அண்ணா காட்சிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்! - டிடிவி தினகரன்

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா மற்றும் திராவிடத்தைப் பற்றிய காட்சிகளைத் தவிர்த்திருக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில... மேலும் பார்க்க

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று(ஜூன் 24 )பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு வி... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

குற்றால பேரருவி, ஐந்தருவியில் மீண்டும் குளிக்கத் தடை

தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க