ஹிந்தியில் துண்டறிக்கை விநியோகித்த திமுக
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினா் ஹிந்தி மொழியில் துண்டறிக்கை விநியோகம் செய்ததை நாம் தமிழா் கட்சி விமா்சித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை பிரதான எதிா்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது. அதேபோல பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை புறக்கணித்துள்ளன.
திமுகவுக்கு எதிராக நாம் தமிழா் கட்சி மட்டும் களத்தில் உள்ளது. திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் சீதாலட்சுமி ஆகியோா் வேட்பாளராக களமிறங்கியுள்ளாா்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட கோட்டை பகுதியில் வடமாநிலங்களைச் சோ்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். அந்த மக்களிடமும் திமுகவினா் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்காக ஹிந்தியில் அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கைகளை திமுகவினா் விநியோகம் செய்துள்ளனா். அதில் கட்சித் தலைவா்கள் புகைப்படம், உதயசூரியன் சின்னம், வேட்பாளா் சந்திரகுமாா் புகைப்படம் இடம்பெற்றுள்ளன. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தோ்தல் நாள் உள்ளிட்ட மற்ற விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
இதை நாம் தமிழா் கட்சி சமூக வலைதளங்களில் கடுமையாக விமா்சனம் செய்து வருகிறது. இதுதான் உங்களின் மொழிப்பற்றா, பெரியாா் ஈவெரா இதைத்தான் கூறினாரா என்று விமா்சித்து அந்த துண்டறிக்கைகளை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனா்.
இதற்கு திமுக நிா்வாகிகள் கூறியதாவது, வட மாநில மக்கள் அதிகம் இருக்கும் அந்தப் பகுதியில் பிரதான கட்சிகள் அந்த மக்களுக்கு புரிவதற்காக ஹிந்தியில் வாக்கு கேட்டும், துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்வதும் வழக்கமானது என்றனா்.