செய்திகள் :

ஹிந்தியில் ரீமேக்காகும் செல்லம்மா தொடர்!

post image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா தொடர் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.

நடிகை அன்ஷிதா நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், ஹிந்தியிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் 2022 மே முதல் 2024 செப்டம்பர் வரை செல்லம்மா தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா நாயகியாக நடித்திருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே தொடரில் அவர் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகர் அர்ணவ் (இவரும் பிக் பாஸ் பிரபலமே) நடித்திருந்தார்.

கணவரை இழந்து பெண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணின் கதையாக செல்லம்மா தொடர் ஒளிபரப்பானது. பின்னர் அவரின் வாழ்க்கையில் மீண்டுமொரு காதல் தோன்றி, அது சந்திக்கும் சவால்களே தொடரின் மையக்கருவாக உள்ளது.

உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் நடிகர்களின் நடிப்பும் சேர்ந்ததால், இந்தத் தொடர் தமிழில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கேரளாவைச் சேர்ந்த அன்ஷிதாவுக்கு தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

இதையும் படிக்க |இராமாயணம் தொடர் நிறைவடைகிறது! புதிய ஆன்மிக தொடர் அறிவிப்பு!

Chellamma serial also being remade in Hindi

கேரளாவுக்கு வரும் மெஸ்ஸி: ஆஸி. உடன் மோதும் ஆர்ஜென்டீனா!

கேராளாவுக்கு வரும் ஆர்ஜென்டீனா அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தேதி முடிவாகாவிட்டாலும் நவ.12 முதல் நவ.18ஆம் தேதிகளில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மெஸ்ஸி... மேலும் பார்க்க

மகரிஷி வால்மீகி விடியோ: சர்ச்சைக்கு அக்‌ஷய் குமார் விளக்கம்!

நடிகர் அக்‌ஷய் குமார் தனது மகரிஷி வால்மீகி விடியோ போலியானது என விளக்கம் அளித்துள்ளார். தயவுசெய்து சரியா அல்லது போலியா என உறுதிப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுங்கள் என தொலைக்காட்சி, செய்தி நிறுவனங... மேலும் பார்க்க

பேலந்தோர் விருதில் ரபீனியாவுக்கு 5-ஆவது இடமா? நெய்மர் கண்டனம்!

தங்கப் பந்து விருதுக்கான தரவரிசைப் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர் ஐந்தாம் இடம் பெற்றது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் கேப்டனும் சக பிரேசில் வீரர... மேலும் பார்க்க

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் விக்ராந்த் மாஸி!

பாலிவுட்டில் வெளியான ‘12த் ஃபெயில்’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ராந்த் மாஸி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். 71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள், தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில்,... மேலும் பார்க்க

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன் லால்!

சினிமாவுக்கு செய்த பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை மலையாள நடிகர் மோகன்லால் இன்று (செப். 23) பெற்றுக்கொண்டார். தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் த... மேலும் பார்க்க

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் ஷாருக்கான்!

ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் நடிகர் ஷாருக்கான். தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் விருதை பெற்றுக்கொண்டார். 71 வத... மேலும் பார்க்க