கொச்சி: பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரைச் சந்தித்த அமித் ஷா
ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிகார் மாநிலம் ராஜ்கிரில் 29.8.2025 முதல் 7.9.2025 வரை நடைபெற உள்ள ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025ஐ தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று அறிமுகப்படுத்தினார்.
ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025 பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7, 2025 வரை நடைபெற உள்ளது.
சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் 8 ஆசிய நாடுகள் மோதுகின்றன, இப்போட்டியில் இந்திய அணி, மலேஷியா, ஜப்பான், சீனா மற்றும் கஜகஸ்தான் ஆகிய அணிகளுடன் A பிரிவில் இடம் பெற்றுள்ளது.
கொரியா, வங்கதேசம் மற்றும் சீன தைபே அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. இதில் ஆசிய பட்டம் வெல்லும் அணி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும்.
பிகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு ஹாக்கி யூனிட் ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் ‘’ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று (22.08.2025) அறிமுகப்படுத்தி, ‘’பாஸ் தி பால் டிராபி சுற்றுப்பயணத்தை’’ (PASS THE BALL TROPHY TOUR) தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பொதுமக்களின் பார்வைக்காக ‘’ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை பயணம் செய்ய உள்ளது.