வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்
`ஹேப்பியா இருக்கா புது பாய் ப்ரண்டோடு; தற்குறி நான் அவளின் நினைவோடு'- என்ன சொல்கிறார் தாடி பாலாஜி?
நடிகர் தாடி பாலாஜி வைத்திருக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
திரைப்பட நடிகரும், விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரொம்பவே பரிச்சயமானவருமான தாடி பாலாஜி ஆரம்பத்தில் தன்னை திமுக அனுதாபியாகக் காட்டிவந்தார். பிறகு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததும் அவர் பக்கம் சாய்ந்தார். தவெக பொதுச் செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் தொடங்கினார்.
மேலும் விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிப்பவர்களைக் கொஞ்சம் கடுமையான தொனியில்கூட பதிலடி கொடுத்தார். தமிழக வெற்றிக் கழகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழிசை சௌந்தர் ராஜன் கூறிய சில கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்தபோது, 'இதற்கு முன் புதுச்சேரியில் கவர்னராக இருந்ததால் விஜய் பேச்சை தண்ணீரில்தான் எழுத வேண்டுமெனச் சொல்கிறார்போல’ எனச் சொன்னார்.
'தவெகவில் சேர்ந்து விட்டீர்களா?' என முன்பு நாம் கேட்ட போது, 'புஸ்ஸி ஆனந்த் திடீர்னு ஒருநாள் கூப்பிட்டார். போனா ‘பாலாஜியை மாநாட்டுக்கு ஒர்க் பண்ணச் சொல்லுங்க’னு விஜய் சொல்லியிருக்கார்னு சொன்னார். அப்ப இருந்தே வேலைகளைத் தொடங்கிட்டேன்' எனச் சொல்லியிருந்தார்.
கூடவே விஜய்யின் உருவத்தை நெஞ்சில் டாட்டு குத்தி வீடியோ வெளியிட்டார். 'டாட்டு குத்தியபோது 7 மணி நேரம் வலியைத் தாங்கிட்டிருந்தேன்' எனச் சொல்லியிருந்த அந்த வீடியோ அப்போது வைரலானது நினைவிருக்கலாம்.
இந்தச் சூழலில் தற்போது தவெகவில் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். ஆனால் தாடி பாலாஜிக்கு இதுவரை எந்தவொரு பொறுப்பும் அறிவிக்கப்படவில்ல்லை. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக ஆனந்த் ஆதவ் அர்ஜுனாவை வரவேற்கும் வீடியோவையும் கூடவே விஜய் பெயரைத் தன் நெஞ்சில் பச்சை குத்தியதையும் ஒப்பிட்டு வைத்திருக்கிறார்.
இந்த மீம் தாடி பாலாஜியின் நண்பர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.