செய்திகள் :

ஹோட்டலில் ரூ.10,900-க்கு சாப்பிட்டு, பின்வாசல் வழியாக ஓட்டம்; சுற்றுலா பயணத்தில் சிக்கிய 5 பேர்

post image

பணம் இல்லாமல் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு தப்பிச் செல்வதை படங்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் 5 பேர் ஹோட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு அருகிலுள்ள சியாவா என்ற இடத்தில் உள்ள ‘ஹேப்பி டே’ ஹோட்டலுக்கு 5 பேர் கொண்ட கும்பல் சாப்பிட வந்தனர். அவர்கள் அனைத்து வகையான உணவையும் ஆர்டர் செய்து போதிய அளவு வயிறு முட்ட சாப்பிட்டனர். வெயிட்டர் அவர்கள் கேட்ட உணவுகளை கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருந்தார். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கத் தொடங்கினர்.

அப்போதுதான் அவர்கள் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கினர். ஒவ்வொருவராக அங்குள்ள கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றனர்.

ஹோட்டலில் சாப்பிட்ட சுற்றுலா பயணிகள்
ஹோட்டலில் சாப்பிட்ட சுற்றுலா பயணிகள்

ஆனால் அப்படி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அதற்குள் அடுத்தவரும் இதே போன்று “ரெஸ்ட்ரூம் சென்று வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டு சென்றார். இதை கவனித்த வெயிட்டர் உடனே ஹோட்டல் உரிமையாளரை எச்சரித்தார். அதற்குள் அனைவரும் ரெஸ்ட்ரூம் செல்வதாக கூறிவிட்டு பின்வாசல் வழியாக தப்பிச்சென்றிருந்தனர்.

அவர்கள் மொத்தம் ரூ.10,900 அளவிற்கு சாப்பிட்டிருந்தனர். பணத்தை கொடுக்காமல் பின்வாசல் வழியாக தப்பிச்சென்றனர். உடனே ஹோட்டலுக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஹோட்டல் உரிமையாளர் ஆய்வு செய்தபோது, சாப்பிட்ட 5 பேரும் ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்த காரில் ஏறி தப்பிச்சென்றது தெரியவந்தது.

உடனே ஹோட்டல் உரிமையாளர் வேறு ஒரு காரில் ஏறி அவர்களை விரட்டிச் சென்றார். அதோடு இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார்.

பணம் கொடுக்காமல் தப்பிய சுற்றுலா பயணிகள்

இதனால் போலீஸாரும் சேர்ந்து விரட்டத் தொடங்கினர். அவர்கள் சென்ற கார் குஜராத் நோக்கி சென்றது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனால் அவர்களது கார் அங்கிருந்து நகர முடியவில்லை. போலீஸாரும், ஹோட்டல் உரிமையாளரும் சேர்ந்து 5 பேரையும் பிடித்துக்கொண்டனர்.

அவர்கள் 5 பேரும் குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்று தெரியவந்தது. அவர்களிடம் சாப்பிட பணம் இல்லாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனால் தான் சாப்பிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். அவர்கள் பிடிபட்டதால் தங்களது நண்பர் ஒருவருக்கு போன் செய்து பணத்தை ஜீபே மூலம் அனுப்பச் சொன்னார்கள். அவரும் பணத்தை அனுப்பிவைத்தார். அதன் பிறகு 5 பேரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

Apollo: தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி கொண்ட சென்னை அப்போலோ

சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள், பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் தனது 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ (Apollo Advanced Stroke Network)-ஐ விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சிறுநீரகப் பிரச்னையுடன் தமிழக விவசாயிகள்; எச்சரிக்கும் சர்வதேச மருத்துவ இதழ்!

அரை நூற்றாண்டுக்கு முன்புவரை நீரிழிவு, புற்றுநோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களை மிக மிகக் குறைவாகத்தான் கண்டு வந்தோம். ஆனால், இப்போதோ இந்த வாழ்வியல் பிரச்னைகளால் பாதி... மேலும் பார்க்க

Grokipedia: விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்பீடியா - எலான் மஸ்கின் திட்டம் என்ன?

அரசியல் முதல் வரலாறு வரை எது பற்றிக் கேட்டாலும் விக்கிபீடியாவில் அனைத்தும் கிடைக்கும். சில நிமிடங்களில் ஒரு தகவல் குறித்த அடிப்படையான தகவல்களை தெரிந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் ... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் குதிரை, ரூ.23 கோடியில் எருமை! - புஷ்கர் கண்காட்சியில் கவனம் ஈர்த்த விலங்குகள்

ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சி, இந்த ஆண்டும் களைகட்டியது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் முக்கிய நட்சத்திரங்களாக ரூ.15 கோடி மதிப்புள்ள... மேலும் பார்க்க

700 மரங்களுடன் ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு: ஏரி முதல் திறந்த தியேட்டர் வரை சுவாரஸ்ய ரகசியங்கள்!

பாலிவுட் நடிகர்கள் அனைவருக்கும் மும்பைக்கு வெளியில் பண்ணை வீடுகள் உள்ளன. ஷாருக் கானுக்கு மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக்கில் பண்ணை வீடு உள்ளது. சல்மான் கானுக்கு மும்பை அருகில் பன்வெல் என்ற இடத்... மேலும் பார்க்க

பசும்பொன் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழா கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று காலை கணபதி ஹோமம் மற்றும் முதல் கால பூஜையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க