What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
ஹோண்டாவின் ஏப்ரல் மேளா: எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
ஹோண்டா கார் நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
கார் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடி விலையை ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ. 76,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
ஹோண்டா எலிவேட் இசட்எக்ஸ் (Elevate ZX) வகை காருக்கு அதிகபட்சமாக ரூ. 76,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் ஷோரூம் விலை ரூ. 11.91 லட்சமாகும்.
ஹோண்டா சிட்டி எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் வகை கார்களுக்கு ரூ. 63,300 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில், ஹோண்டா சிட்டியின் எஸ்வி வகை காரின் ஷோரூம் விலை ரூ. 12.28 லட்சம்.
சிட்டி இ: எச்இவி (City e:HEV) இசட்எக்ஸ் வகை காருக்கு ரூ. 65,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் ஷோரூம் விலை ரூ. 20.75 லட்சம.
ஹோண்டா அமேஸ் இரண்டாம் ஜெனரேசன் காருக்கு ரூ. 57,200 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஷோரூம் விலை ரூ. 7.63 லட்சமாகும்.
இந்த தள்ளுபடிகள் அனைத்தும் ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டவை. டீலர்கள், இடத்துக்கு ஏற்ப தள்ளுபடி விலை மாறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.