செய்திகள் :

ஹோலி கொண்டாடிய சிறுவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!

post image

மகாராஷ்டிரத்தில் ஹோலி கொண்டாடிய சிறுவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.

மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தின் சம்டோலி பகுதியில் வசிக்கும் 15-16 வயதுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் இன்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஹோலி கொண்டாடி முடித்த பின்னர் குளிப்பதற்காக பத்லாபூர் பகுதியிலுள்ள உலாஸ் ஆற்றில் 4 பேரும் இறங்கியுள்ளனர். அப்போது, ஆற்றில் நீரின் அளவு திடீரென உயர்ந்துள்ளது.

இதனால், மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் 4 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

இதையும் படிக்க | 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சிறுவர்கள்!

பலியான மாணவர்கள் ஆர்யன் மேதார் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), ஆர்யன் சிங் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நால்வரின் உடலும் ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டு மருத்துமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கேரளம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 மாணவா்கள் கைது

கேரள மாநிலம், களமசேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவா் விடுதி அறைகளில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க ஆசிரியா்கள் நியமன ஊழல் வழக்கு: சாட்சியமாக மாற முன்னாள் கல்வி அமைச்சா் மருமகன் முடிவு

மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியா் நியமன ஊழல் வழக்கில் கைதான முன்னாள் கல்வி அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் மருமகன் கல்யாண்மய் பட்டாச்சாரியா சாட்சியமாக மாற சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. தொடக்கக் ... மேலும் பார்க்க

வெடிவிபத்தில் 9 போ் இறந்த சம்பவம்: ஆயுத தொழிற்சாலை அதிகாரிகள் 4 போ் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் மத்திய அரசின் ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த ஜனவரியில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 9 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 4 அதிகாரிகள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இ... மேலும் பார்க்க

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சிறுவர்கள்!

ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை இரு சிறுவர்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் தீக் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி... மேலும் பார்க்க

கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகளுமான ரன்யா ராவ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

ஜம்மு - காஷ்மீரின் பந்திபோராவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோமீ... மேலும் பார்க்க