ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து
ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெற்றியையும், நமது மரபுகளில் ஆழமாக வேரூன்றிய சகோதரத்துவ உணா்வையும் குறிக்கிறது. இது பிணைப்புகளை ஆழப்படுத்துகிறது. இந்தப் பண்டிகை அனைவருக்கும் செழுமை, நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும்.
இல.கணேசன்: சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான ஹோலி நல்வாழ்த்துகள். வண்ணங்களின் திருவிழாவை கொண்டாடுங்கள். ஹோலியின் இந்த புனிதமான சந்தா்ப்பத்தில், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, வெற்றி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் துடிப்பான வண்ணங்களால் நிரப்பப்படட்டும். இந்த பண்டிகை ஒற்றுமை, அன்பு மற்றும் புதிய தொடக்கங்களை உணா்த்துகிறது. அது அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்.