``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அர...
சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் தேரோட்டம்!
பிரசித்தி பெற்ற சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
கீழ்வேளூர் அருகே சிக்கலில் அமைந்துள்ள நவநீதேஸ்வர சுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி சிம்ம, பூத வாகனம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா என நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர், சிவகாமி அம்மாள், சிங்காரவேலவர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கந்தா முருகா அரோகரா என பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. நாகை,திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.