திருமண நிகழ்வில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன்..!
நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றது கவனம் ஈர்த்துள்ளது.
ஜெயம் திரைபடத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் ரவி. பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு முன்னணி நடிகராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிந்தார். தனது பெயரையும் ரவி மோகன் என மாற்றினார்.
பாடகி கெனிஷாவுடன் காதல் என்ற வதந்திகளுக்கு இருவருமே மறுப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், வேல்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷன் மகளின் திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாகச் சென்ற காட்சிகள் சமூகவலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
”இது அவர்கள் வாழ்க்கை” எனப் பலரும் இந்தமுறை நேர்மறையாகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு, பராசக்தி, ஜுனி, தனி ஒருவன் 2 என பிஸியாக நடித்து வருகிறார்.
கடைசியாக ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை படம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Yes, It's Keneesha who is sitting behind #RaviMohan !!
— AmuthaBharathi (@CinemaWithAB) May 9, 2025
It's their life, let them live...pic.twitter.com/OeaDDBfZRP