ஆனந்தக் கண்ணீரில் ஆண்டனி..! கான்பிரன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியல் பெட்டிஸ்!
ஐரோப்பிய கான்பிரன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கு ரியல் பெட்டிஸ் அணி முன்னேறியது.
பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆண்டனி தற்போது ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் வந்தபிறகு ரியல் இந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஐரோப்பிய கான்பிரன்ஸ் லீக் அரையிறுதியின் 2-ஆம் கட்ட போட்டியில் ரியல் பெட்டிஸ் 2-2 என சமன்செய்தது. ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 4-3 என ரியல் பெட்டிஸ் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியின் 30-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த ஆண்டனி போட்டி முடிந்தபிறகு கண்ணீர் சிந்தியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.
கிண்டல் - பாராட்டு
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருக்கும் 4 மாதங்களுக்கு முன்பாக மிகவும் கிண்டல் செய்யப்பட்ட ஆண்டனியை தற்போது உலகமே புகழ்ந்து வருகிறது.
ரியல் பெட்டிஸ் அணியில் ஆண்டனி இணைந்த பிறகு அந்த அணி தொடர்ச்சியாக வென்று வருகிறது. லா லீகா தொடரில் 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஐரோப்பிய கான்பிரன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
லோனில் வாங்கப்பட்ட ஆண்டனி
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் 100 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்ட ஆண்டனி மோசமாக விளையாடியதால் அவரை லோன் அடிப்படையில் ரியல் பெட்டிஸ் அணிக்கு விற்றது.
தற்போது சிறப்பாக விளையாடிவரும் ஆண்டனியை ரியல் பெட்டிஸ் அணியினர் இன்னும் கூடுதலாக ஓராண்டு இருக்கும்படி விரும்புகின்றனர்.
கடினமான சூழலைக் கடந்திருக்கிறேன்
போட்டி முடிந்தபிறகு ஆண்டனி, “நான் இங்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்படிருப்பேன் என எனது குடும்பத்திற்கும் தெரியும். எனது அம்மாவுடன் எனது மனைவி, சகோதரிகளுடன் அதிகமாக அழுதிருக்கிறேன். கடினமான காலக்கட்டத்தை தாண்டி வந்துள்ளோம். தற்போது, நான் கனவில் வாழ்கிறேன்” என்றார்.
ரியல் பெட்டிஸ் கிளப்பை நேசிக்கிறேன்
செவில்லாவுடன் வென்ற பிறகு ஆண்டனி, “நான் இந்த கிளப்பில் நன்றாக விளையாடுகிறேன்.நான் என்னை இங்குதான் கண்டறிந்தேன். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த அணியை, இந்த நகரத்தை, அனைத்தையும் தினமும் நேசிக்கிறேன்.” என்றார்.
25 வயதாகும் ஆண்டனி ரியல் பெட்டிஸ் அணியில் 8 கோல்கள், 5 அசிஸ்ட்ஸ் என அசத்தியுள்ளார்.