ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ
ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித்தது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாா்ச் 14-ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சில பகுதிகளில் மாா்ச் 15-ஆம் தேதி கொண்டாடப்படுவதற்கான வாய்ப்புள்ளதால் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தாா்.
எனவே, மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்கள், சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் சிறப்பு தோ்வுகளின்போது இத்தோ்வை எழுத வாய்ப்பு வழங்கப்படவுள்ளது எனவும் அவா் கூறினாா்.