செய்திகள் :

1 மணி நேரம் முதியவரை நிற்க வைத்த அரசு ஊழியர்களுக்கு... அதிரடி பாடம் எடுத்த அதிகாரி..! என்ன நடந்தது?

post image

வங்கிகள், ரயில் நிலையங்களில் முதியவர்கள் வரிசையில் நின்றால் அவர்களுக்கு இளையவர்கள் முன் வரிசையில் செல்லும்படி இடம் கொடுப்பது வழக்கம். ஆனால், டெல்லி அருகில் இருக்கும் நொய்டா குடியிருப்பு வீட்டு வசதித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் எப்போதும் முதியவர்களை நீண்ட நேரம் வரிசையில் நிற்க வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று பலரும் வேதனைப்பட்டனர்.

இந்நிலையில், நொய்டா குடியிருப்பு வீட்டு வசதித்துறை அரசு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோகேஷ், அலுவலகத்தில் முதியவர் ஒருவர் வரிசையில் காத்து நின்று கொண்டிருப்பதை தனது அறையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்தார்.

டாக்டர் லோகேஷ்

உடனே அந்த கவுண்டருக்கு சென்று, அங்கு பணியில் இருந்த பெண் அதிகாரியிடம் அந்த முதியவரது வேலையை உடனே செய்து கொடுக்கும்படியும், இது போன்று நீண்ட நேரம் நிற்க வைக்கவேண்டாம் என்றும் லோகேஷ் கேட்டுக்கொண்டார்.

20 நிமிடம் கழித்து லோகேஷ் கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது, அவர் சொன்ன அதே கவுண்டரில் அந்த முதியவர் தொடர்ந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த பெண் ஊழியரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். சரியான பதில் இல்லை.

இதனால், அனைத்து ஊழியர்களையும் 20 நிமிடம் எழுந்து நின்று வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.

பணியில் இருந்த ஊழியர்கள் 20 நிமிடம் நின்று கொண்டே வேலை செய்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியது.

பள்ளியில் மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது போன்று அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரி தண்டனை கொடுத்திருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

`அரசு அதிகாரிகள் சரியான முறையில் பணியாற்ற இது போன்ற தண்டனை அவசியம் தேவை' என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து டாக்டர் லோகேஷ் கூறுகையில், "வரிசையில் நின்ற முதியவருக்கு சொத்து பிரச்னை தொடர்பாக பதிலளிக்காமல் அரசு ஊழியர் முதியவரை வரிசையில் காக்க வைத்தார். இதனை, நான் கண்காணிப்பு கேமராவில் பார்த்து தெரிந்து கொண்டு அவரிடம் சென்று வேலையை விரைந்து முடித்துக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். முதியவர் ஒரு மணி நேரமாக வரிசையில் நின்று கொண்டிருந்தார். எனவே அனைத்து ஊழியர்களும் 20 நிமிடம் எழுந்து நின்று கொண்டே வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டேன்'' என்றார். மொத்தம் 16 ஊழியர்கள் இத்தண்டனைக்கு உள்ளானார்கள்.

நாமக்கல்: `பணம் பெருகும்' -யூடியூபில் ஜோதிடர் கூறியதை கேட்டு கோயிலில் குவிந்த மக்கள்..!

நாமக்கல், கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மார்கழி மாத முதல் நாளையொட்டி நேற்று அதிகாலை சுவாமியை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்போது கோயில் வளாகத்தில் வ... மேலும் பார்க்க

Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இந்தியர்கள் பலி!

ஜார்ஜியா நாட்டில் சுற்றுலா நகரமான குடெளரி என்ற பனிமலை பிரதேசத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குடெளரி நகரில் உள்ள ஸ்கை ரிசார்ட்டில் உள்ள உணவகத்தில் சுற்றுலா பயணிக... மேலும் பார்க்க

DK Goel: `ஊழியரின் தாயை தகாத வார்த்தைகளில் பேசிய சேர்மன்!' - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

FIITJEE என்கிற போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் சேர்மன் தன்னுடைய பணியாளர் ஒருவரை வீடியோ மீட்டிங்கில் தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கும் சம்பவம் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.FIITJEE நிறுவன... மேலும் பார்க்க

"நான் குப்பைகளைச் சாப்பிடுவேன்" - புதுமையான நகரும் குப்பைத்தொட்டி பற்றி தெரியுமா?!

ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு தளத்தில் தானாகவே நடமாடும் குப்பைத்தொட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒவ்வொருவரிடமும் சென்று கையில் இருக்கும் குப்பைகளைக் கேட்கும் குப்பைத்தொட்டியின் வ... மேலும் பார்க்க

Uber: சரியான நேரத்தில் வராத கார்; வாடிக்கையாளருக்கு ரூ. 54 ஆயிரம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

உபெர் (uber) நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளதாகக் கூறி, வாடிக்கையாளருக்கு இழப்பீடாக 54 ஆயிரம் வழங்க டெல்லி நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.உபெர் (uber) செயலியில் வாடிக்கையாளர் ஒருவர் முன்பதிவு ச... மேலும் பார்க்க

விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி... கணவர் அபிஷேக் பச்சனுடன் விருந்தில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிகளின் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடைய... மேலும் பார்க்க