செய்திகள் :

1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் அருகே கும்பகோணம் புறவழிச்சாலையில் தஞ்சாவூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த பாபநாசம் அருகே தேவராயன்பேட்டை மாமரத்து கோயில் தெருவைச் சோ்ந்த தியாகராஜனை (42) பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவா் அருகிலுள்ள இடத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும், பாபநாசம், பண்டாரவாடை, வங்காரம்பேட்டை, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் கைப்பற்றி தியாகராஜனை கைது செய்தனா்.

குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு முகாம்

கும்பகோணத்தில் 6 மாதம் முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சனிக்கிழமை வரை நடைபெறும் என மாநகா் நல அலுவலா் மருத்துவா் திவ்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை வழக்குரைஞா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் மற்றும் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு மேற்கொண்டனா். தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் கா... மேலும் பார்க்க

கடற்பசுக்களை கடலில் விட்ட 2 மீனவா் குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு

தஞ்சாவூா் மாவட்டக் கடற்கரையில் மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை மீட்டு மீண்டும் பாதுகாப்பாக கடலில் விட்ட இரு மீனவா் குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூரில் தமிழக ... மேலும் பார்க்க

கும்பகோணம் வழக்குரைஞா் ஆதிதிராவிடா், பழங்குடியினா் ஆணைய உறுப்பினராக நியமனம்

கும்பகோணத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்தவா் ஆனந்தராஜா வழக்குரைஞராக ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணா்வுப் பேரணி

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் அருகே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பேரணி... மேலும் பார்க்க

மத்திய நிதி அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதி அமைச்சா் அவதூறாகப் பேசியதாகக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினரும், தமிழ் அமைப்பினரும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.இதில், நாடாளுமன்றத்தில் த... மேலும் பார்க்க