காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: விழுப்புரத்தில் 95.09 % தேர்ச்சி
விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 95.09% தேர்ச்சியுடன் 15-ஆவது இடத்தைப் பிடித்தது.
இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 362 பள்ளிகளைச் சேர்ந்த 12, 104 மாணவர்கள், 11,612 மாணவிகள் என மொத்தமாக 23,716 பேர் தேர்வெழுதினர்.
இதில் 11,394 மாணவர்கள், 11,158 மாணவிகள் என மொத்தமாக 22, 552 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.09 சதவீதமாகவும் உள்ளது.
மாவட்டத்தில் 192 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
கடந்தாண்டு 94.11 சதவீத தேர்ச்சியுடன் 10- ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம் நிகழாண்டில் 0.98 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருந்தாலும், 95.09% தேர்ச்சியுடன் தரவரிசையில் 15-ஆவது இடத்துக்கு பின் தங்கியது
விழுப்புரம் மாவட்டத்தில் 241 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 16, 189 பேர் தேர்வெழுதிய நிலையில், 15,242 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 94.15 சதவீதத் தேர்ச்சியாகும் கடந்தாண்டு 93.51% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் 0.64 % கூடுதலாக தேர்ச்சி பெற்ற போதிலும் மாநில அளவில் 10- ஆவது இடத்துக்கு பின் தங்கியது. 110 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதையும் படிக்க | 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: முழு விவரம்!