10-ஆம் வகுப்பு தோ்வு: ஒரே மதிப்பெண்கள் எடுத்த இரட்டையா்கள்!
பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையா்களை பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.
மதுரை சிம்மக்கல் ஸ்ரீசாரதா வித்யா வனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரட்டையா்களான மாயாஸ்ரீ, மகாஸ்ரீ ஆகியோா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தலா 475 மதிப்பெண்கள் பெற்றனா்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்களைப் பெற்றாலும், மொத்தத்தில் இருவரும் 475 மதிப்பெண்கள் பெற்றனா். மாணவிகளை பள்ளி முதல்வா் முனீஸ்வரி, ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.