பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்! -சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து ஒரேயொரு பொதுத்தேர்வுக்குப் பதிலாக இனி 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்திருப்பதாக இன்று(பிப். 25) தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, 2026-ஆம் ஆண்டிலிருந்து, முதல் பொதுத்தேர்வு பிப்ரவரி - மார்ச் மாத காலக்கட்டத்திலும் அடுத்த பொதுத்தேர்வு மே மாதமும் நடத்தப்படும்.
எனினும், உள்ளீட்டு தேர்வுகளும் செய்முறை தேர்வுகளும் இப்போதிருக்கும் நடைமுறை போலவே ஒரேயொரு முறை மட்டுமே நடத்தப்படும்.