செய்திகள் :

10-ஆவது முறையாக கிங்ஸ் கோப்பையை வென்ற அல்-இத்திஹாத்..! தொடர் நாயகனாக கரீம் பெஞ்சமா!

post image

சௌதியின் கிங்ஸ் கோப்பையை அல்-இத்திஹாத் கிளப் 10-ஆவது முறையாக வென்று அசத்தியது.

சௌதி அரேபியாவின் பழைமையான போட்டிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் கோப்பை என்று அழைக்கப்படும் இந்த கிங்ஸ் கோப்பை அரசர்களின் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் இறுதிப் போட்டியில் அல்-இத்திஹாத் உடன் அல்-காத்சியா மோதியது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் அல்-இத்திஹாத் வென்றது.

இந்தப் போட்டியில் கரீம் பெஞ்சமா 34, 90+4ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். ஹைஸீம் அவோரா 43ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

முதல் பாதியின் கடைசியில் பெனால்டியில் அல்-காத்சியா அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. 81ஆவது நிமிஷத்தில் இந்த அணியினருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதால் 10 பேருடனே கடைசி சில நிமிஷங்களை விளையாடியது.

போட்டியின் 80-ஆவது நிமிஷத்தில் அல்-காத்சியா அணியின் ஔபமேயாங் அடித்த கோலை கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார்.

61 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த அல்-இத்திஹாத் அணி 89 சதவிகித துல்லியமாக பந்தினை பாஸ் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு பேலன் தோர் விருது பெற்ற கரீம் பெஞ்சமா இந்த சீசனின் தொடர் நாயகன் விருது பெற்றார்.

அல்-இத்திஹாத் அணி இந்த சீசனில் சௌதி புரோ லீக்கையும் 10-ஆவது முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்புக் கேட்காத கமல்: கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்காக மன்னிப்புக் கேட்காததால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மொழி... மேலும் பார்க்க

சின்மயி மீதான தடையை நீக்குவதில் என்ன சிக்கல்?

பாடகி சின்மயி மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் சின்மயி குரலில் இடம்பெற்ற, ‘ஒரு தெய்வம் தந்த பூவே... மேலும் பார்க்க

அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்!

சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. சேலம் அன்னதானப்பட்டி விநாயகர் மாரியம்மன் மற்றும் திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு ... மேலும் பார்க்க

பிரபாஸின் ராஜா சாப் வெளியீட்டுத் தேதி!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில்... மேலும் பார்க்க

பாடலாசிரியர் பா. விஜய் மீது பண மோசடி புகார்!

பாடலாசிரியர் பா. விஜய் மீது பண மோசடி புகாரொன்று அளிக்கப்பட்டுள்ளது.சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் வசிப்பவர் அருள்தாஸ், அவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் ச... மேலும் பார்க்க

மனுசி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு?

வெற்றி மாறன் தயாரிப்பில் நடிகை ஆண்ட்ரியா நடித்த மனுசி திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாம்.இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த அத... மேலும் பார்க்க