செய்திகள் :

பிரபாஸின் ராஜா சாப் வெளியீட்டுத் தேதி!

post image

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.

சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. சமீபத்தில் வெளியான கல்கி ஏடி 2989 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.

தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடையாத காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படம் வருகிற டிச. 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிக்க: மனுசி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு?

கோவா டெம்போவை வீழ்த்தியது டெல்லி தபாங்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சேலஞ்சா்ஸை 9-6 என்ற கணக்கில் வீழ்த்தியது தபாங் டெல்லி டிடிசி. இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 ஆட்டங்கள் அகமதாபாதில் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

ராமின் பறந்து போ டீசர்!

இயக்குநர் ராமின் பறந்து போ படத்தின் டீசர் வெளியானது.கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிகர் மிர்ச்சி சிவாவி... மேலும் பார்க்க

ஓடிடியில் லால் சலாம்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.லால் சலாம் திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.அறிமுக ... மேலும் பார்க்க

ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!

பென்ஸ் படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி இணைந்தது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகானக நடிக்கும் படத்தி... மேலும் பார்க்க

மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பிறந்தநாளில்... காதலைச் சொன்ன ஆர்த்தி சுபாஷ்!

மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பவன் ரவீந்திராவின் பிறந்தநாளில் தனது காதலைக் கூறியுள்ளார் நடிகை ஆர்த்தி சுபாஷ்.யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். இதனைத் தொடர்ந்து, சன் தொல... மேலும் பார்க்க