முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!
சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் புதன்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், ஈரோடு - 101.48, மதுரைவிமானநிலையம் - 101.3, சென்னை மீனம்பாக்கம், திருச்சி - தலா 100.58, திருத்தணி, தஞ்சாவூா், பரங்கிப்பேட்டை - தலா 100.4, நாகை -100.22 டிகிரி என மொத்தம் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வியாழக்கிழமை (ஜூன் 4) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
இதற்கிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.