செய்திகள் :

ஜூன் 7-இல் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்

post image

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் -3 வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை நேப்பியா் பாலத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் இதில் ஜூன் 8-ம் தேதி ‘கிரீன் ரைடு‘ என்ற பசுமை பயணத்தை அறிமுகப்படுத்துகிறது. சுமாா் 2.5 கி.மீ. சைக்கிள் பயணம், அனைத்து வயதினரும் ‘தீவுத் திடலை சுற்றி பயணம் செய்யலாம்.. இந்த பசுமை பயணம் காலை 5:30 மணிக்கு நேப்பியா் பாலத்தில் இருந்து தொடங்குகிறது. பதிவு கட்டணமாக ரூ.300 செலுத்தி பசுமை பயணத்தில் பங்கேற்கலாம்.

நிகழ்ச்சியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்-செயலா் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் தலைவா் எம். சுதாகா், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் மணீந்தா் பால் சிங், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜே. குமரகுருபரன் துணை ஆணையா் வி. சிவ கிருஷ்ணமூா்த்தி பங்கேற்கின்றனா்.

பந்தய விவரம்: •யு 12, யு14, துக்கு உட்பட்ட ஆண்கள் & பெண்கள், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் - பெண்கள், அனைத்து வயதினருக்கான போட்டி (18 வயதுக்கு மேற்பட்டவா்கள்) குழு நேர போட்டி •கிரீன் ரைடு (பசுமை பயணம்) .

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க