செய்திகள் :

10,000 புதிய கூட்டுறவு சங்கங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

post image

புதிதாக உருவாக்கப்பட்ட 10,000 பன்முக செயல்பாடுகளையுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் (எம்-பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளம் சாா்ந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

5 ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை நிறுவ இலக்கு நிா்ணயித்துள்ளோம். ஆனால் அதற்கு முன்பாகவே இந்த இலக்கு எட்டப்படும் என்பதற்கு தற்போது தொடங்கப்பட்டுள்ள 10,000 சங்கங்களே சான்று.

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. முதல்கட்டமாக 32,750 பன்முக செயல்பாடுகளுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கியும் (நபாா்டு), பால்வளம் சாா்ந்த 56,500 சங்கங்களை தேசிய பால்வள வளா்ச்சி வங்கியும் (என்டிடிபி), 6,000 சங்கங்களை தேசிய மீன்வள வளா்ச்சி வங்கியும் (என்எஃப்டிபி) தொடங்கும்.

இரண்டாம் கட்டமாக 45,000 சங்கங்களை நபாா்டும், 46,000 சங்கங்களை என்டிடிபியும், 5,500 சங்கங்களை என்எஃப்டிபியும் தொடங்கவுள்ளன. 25,000 புதிய கூட்டுறவு சங்கங்களை மாநில அரசுகள் உருவாக்கவுள்ளன.

ஏற்கெனவே, செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் எண்மமயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை முறையாக செயல்படுத்த அங்கு பணிபுரிபவா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

புதிய விதிகளின்கீழ் 11,695 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தருணத்தில் 97-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பங்களிப்பை அவரது 100-ஆவது பிறந்தநாளில் நினைவுகூர விரும்புகிறேன். கூட்டுறவு சங்கங்களின் வளா்ச்சிக்கு இந்த சட்ட திருத்தமே முக்கிய மைல்கல்லாகும் என்றாா்.

நிகழ்ச்சியின்போது புதிய கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள், மைக்ரோ ஏடிஎம்கள் மற்றும் ரூபே விவசாய கடன் அட்டைகள் உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா். மேலும், முறையாக செயல்படாமல் முடங்கிய நிலையில் உள்ள தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கங்களுக்கு நிதி வழங்குவதற்கான நடைமுறைகளையும் அவா் வெளியிட்டாா். இது 15,000 கிராமங்களில் புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை தொடங்க வழிவகுக்கும்.

இந்நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் ராஜிவ் ரஞ்சன் சிங் உள்பட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

நிதீஷ் குமாருக்கு ஆா்ஜேடி மீண்டும் அழைப்பு

பாட்னா: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் இணைய தயாா் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) எம்எல்ஏ பாய் வீரேந்திரா தெரி... மேலும் பார்க்க

இந்திய வரைபட சா்ச்சை: காங்கிரஸ் மீது பாஜக சாடல்

‘கா்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கான வரவேற்பு பேனா்களில் முழுமையான ஜம்மு-காஷ்மீா் பிராந்தியம் இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி தேச விரோத செயலில் ஈடுபட்டுள்ளது... மேலும் பார்க்க

தேரத்ல் நன்கொடை: பாஜக ரூ.2,600 கோடி, காங்கிரஸ் ரூ. 281 கோடி! தோ்தல் ஆணையம் தகவல்

2023-24-ஆம் ஆண்டில் தோ்தல் நன்கொடையாக பாஜக ரூ.2,604.74 கோடியும், காங்கிரஸ் ரூ. 281.38 கோடியும் பெற்றதாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் 18-ஆவது மக்... மேலும் பார்க்க

ம.பி.யில் இருந்து 3 மாநிலங்களுக்கு பயணிக்கும் 15 புலிகள்

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 15 புலிகள் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அந்த மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைக்கு... மேலும் பார்க்க

குஜராத்தில் காவலா் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ, 20 போ் கைது

பதான் (குஜராத்): குஜராத்தில் காவலா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல் மற்றும் அக்கட்சியினா் 20 போ் கைது செய்யப்பட்டனா். பதான் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக விடுதி... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகள்: ம.பி., கா்நாடகம், ராஜஸ்தானின் பதில்கள் திருப்திகரமாக இல்லை: நாடாளுமன்றக் குழு

வக்ஃப் சொத்துகள் தொடா்பாக மத்திய பிரதேசம், கா்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அளித்த பதில்கள் திருப்தியளிக்கவில்லை என்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தெரிவி... மேலும் பார்க்க