செய்திகள் :

10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல்வர் ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

post image

பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை மாணவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்! பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்!

இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள்.

தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும், வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!

திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய சடலம்!

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கரை ஒதுங்கி கிடப்பத... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி

கரூர் அருகே டிராக்டர் மீது தனியார் சொகுசு பேருந்து மோதிவிட்டு எதிரே வந்த சுற்றுலா வேன் மீதும் மோதியதில் பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கரூர் அடுத்த மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோதுர் பிரி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில் தேர்த் திருவிழா

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள... மேலும் பார்க்க

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க