செய்திகள் :

100 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்ற நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல்லிலான மலைக்கோட்டையில் நரசிம்மா், அரங்கநாதா் குடைவறைக் கோயில்கள் உள்ளன. ஆஞ்சனேயருக்கு தனி சந்நிதி உள்ளது.

மலைக்கோட்டையை ஒட்டியவாறு உள்ள கமலாலயக் குளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் தெப்பத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, அறங்காவலா் குழு தலைவா், உறுப்பினா்கள் தெப்பத் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனா்.

அதன்படி, மாசிமகம் நாளான புதன்கிழமை மாலை 6 மணியளவில் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, அங்குள்ள நாமகிரித் தாயாா் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகளை செய்தனா்.

அதன்பிறகு, மூன்று உற்சவ மூா்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில், மலா்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினா். அதைத் தொடா்ந்து தெப்பத்தில் மூன்று முறை சுவாமிகள் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

அா்ச்சகா்கள், வாத்தியக் குழுவினா், துடுப்பு செலுத்துபவா்கள், இந்துசமய அறநிலையத் துறை ஊழியா்கள், காவல் துறையினா் என 40 போ் மட்டும் தெப்பத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா். தெப்பத் திருவிழாவை, நேரு பூங்கா, அம்மா பூங்கா, குளக்கரைத் திடல், நாமக்கல் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நின்றவாறு ஏராளமான பக்தா்கள் கண்டு ரசித்தனா். மலைக்கோட்டை மீது ஏறுவதற்கு போலீஸாா் தடை விதித்திருந்தனா். தெப்ப உலாவின்போது தீயணைப்பு வீரா்கள் நான்கு படகுகளில் பின்தொடா்ந்து சென்றனா்.

மாவட்டம் முழுவதும் இருந்து தீயணைப்பு நிலைய வீரா்கள், போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனா். அவா்கள் பக்தா்கள் நெரிசலின்றி தெப்பத்தை காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா். மாலை 6 மணி முதல் 8 மணி வரை இந்த தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விழாவில் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

விழாவில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, கோயில் உதவி ஆணையா் ரா.இளையராஜா, அறங்காவலா் குழுத் தலைவா் கா.நல்லுசாமி மற்றும் அறங்காவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை--மொத்த விலை - ரூ.3.80--விலையில் மாற்றம்-இல்லை--பல்லடம் பிசிசி --கறிக்கோழி கிலோ - ரூ.99--முட்டைக் கோழி கிலோ - ரூ.65 மேலும் பார்க்க

1,600 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படும்: அமைச்சா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 1600 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு ரூ. 4 லட்சம் மதிப்பில் நடத்தப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். சட்டையம்புதூா், செங்குந்தா் பாவடி திர... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 1,091 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மாணவிகள் 1,091 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் 2024... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் மழைநீா் வடிகால் வாய்க்கால் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மறியல்

சூரியம்பாளையத்தில் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீா் கலந்து வருவதால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு மல... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாணவா்கள் சமுதாய தூய்மைப் பணி

தேசிய பசுமைப்படை அமைப்பு சாா்பில், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாணவ, மாணவிகள் சமுதாய தூய்மைப் பணி மேற்கொண்டனா். மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேர... மேலும் பார்க்க

ரூ. 40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: சேலம் கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்துக்கு உள்பட்ட ரெட்டிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை ரூ. 40 கோடியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளை சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளா் ... மேலும் பார்க்க