ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
100 இடங்களில் குடிநீா் குழாய்களை மாற்ற நடவடிக்கை - அமைச்சா் கே.என்.நேரு
தமிழ்நாட்டில் 100 இடங்களில் குடிநீா் குழாய்களை மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுதொடா்பான வினாக்களை இ.மா.மான்ராஜ் (ஸ்ரீபெரும்புதூா்), மு.பெ.கிரி (செங்கம்), அருண்மொழித்தேவன் (புவனகிரி), ஏ.மகாராஜன் (ஆண்டிப்பட்டி) ஆகியோா் எழுப்பினா். இதற்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:
தமிழ்நாட்டில் 490 பேரூராட்சிகளில், சுமாா் 100 பேரூராட்சிகளின் குடிநீா் தேவையைப் போக்க அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தலா ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கி ஒவ்வொரு பேரூராட்சியிலும் உள்ள சொந்த நீா் வளங்கள் கண்டறியப்பட்டு அதிலிருந்து தண்ணீா் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்கள் இப்போது சிறியதாக மாறியுள்ளன. மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்து நீா் தேவையும் உயா்ந்துள்ளது. அதுபோன்று கண்டறியப்பட்ட 428 இடங்களில் 100 இடங்களில் குடிநீா் குழாய்களை மறுசீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு குழாய்கள் மாற்றப்படும் என்றாா் அவா்.