செய்திகள் :

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி பட்டினி போடுகிறது: கனிமொழி எம்.பி.

post image

100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களை மத்திய பாஜக அரசு பட்டினி போடுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "உழைப்பவன் கூலியை வியர்வை உலர்வதற்கு முன்பு கொடுத்துவிடு” எனச் சொல்கிறது ஒரு பொன்மொழி.

ஆனால், எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளப் பாக்கி 4,034 கோடி ரூபாயை நிறுத்தி வைத்து கொடுங்கோல் ஆட்சியாகவே மாறிவிட்டது ஒன்றிய அரசு. வறுமையின் காரணமாக 100 நாள் வேலையில் இணைந்து உழைப்பவர்கள் அனைவரையும் ஊழல்வாதிகள் போலச் சித்தரித்து ஊதியப் பணத்தைக் கொடுக்க மாட்டோம் என்பது கொடுங்கோல் ஆட்சியில் கூட நடக்காதது. ஏழைகள் உழைப்பிற்குக் கூலி கொடுக்க மனமில்லாத ஒன்றிய பாஜக அரசு, உழைக்கும் மக்களையே ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பாஜகவினர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கச் சொல்லி முதல்வர் கடிதம் எழுதி வலியுறுத்தினார்; நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது. மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது கமலாலயம்!

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

தமிழ்நாட்டின் ஏழைகள் ஊதியமின்றி தெருவில் நிற்கும் போது ஒன்றிய அரசிடம் போராடி பணத்தைப் பெற்றுத் தருவதுதானே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் கடமையாக இருக்க வேண்டும்?

கல்வி நிதி, பேரிடர் நிதியை எல்லாம் தராத ஒன்றிய அரசு, இப்போது 100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களைப் பட்டினி போடுகிறது. உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஊதியத்தைக் கேட்பவர்களையே கொச்சைப்படுத்தும் பாஜகவினருக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பணம் ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து சனிக்கிழமை கோவில்பட்டியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.

உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு

உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இன்று(ஏப். 2) சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் ராமநாதபுரம் சட்டப்... மேலும் பார்க்க

நித்தியானந்தா இறந்துவிட்டாரா? கைலாசா விளக்கம்

தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக்கொண்டு, நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தலைமறைவாகி, கைலாசா என்ற தீவை வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வரும... மேலும் பார்க்க

தேர்தல் நேரத்தில் திமுக நாடகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வ... மேலும் பார்க்க

கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு... மேலும் பார்க்க

கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் நடைபெற்றது.இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட... மேலும் பார்க்க

கச்சத்தீவு தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு!

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை பாஜக ஆதரித்துள்ளது.இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க... மேலும் பார்க்க