1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் கயல் தொடர்!
கயல் தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தொடர் எப்போதும் டிஆர்பியில் முதல் மூன்று இடத்தில் இருக்கும்.
தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இத்தொடரின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும் எல்லா தடைகளையும் எப்படி அவள் தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.
தொடரில் கயலுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கதை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்கிறது.
இதையும் படிக்க: அகத்தியா வெளியீட்டுத் தேதி!
நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துவரும் கயல் தொடர் திங்கள்முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்தத் தொடர் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பி. செல்வம் 'கயல்' தொடரை இயக்குகிறார்.
4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
தற்போது உள்ள சூழலில் 500 எபிசோடுகளுக்கு அதிகமாக ஒளிபரப்பாகுவதே பெரிய விஷயமாக உள்ளது. இந்த நிலையில், கயல் தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் தொடர் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
மக்கள் மத்தியில் இத்தொடர் ஆரம்பிக்கும்போது கிடைத்த அதே வரவேற்பு, தற்போது வரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.