செய்திகள் :

11 குழந்தைகள் உயிரிழந்திருப்பு; கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை எழுதிக் கொடுத்த டாக்டர் கைது

post image

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 11 குழந்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய ஆயவில் கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று கூறப்பட்டது. வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் 'Diethylene Glycol (DEG)', 'Ethylene Glycol (EG)' நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன.

கோல்ட்ரிஃப் (Coldrif)
கோல்ட்ரிஃப் (Coldrif)

இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) தமிழ்நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் 'Sresan Pharmaceuticals' என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இருமல் மருந்துதான் என்று அந்நிறுவனத்தில் விசாரணையும், ஆய்வும் நடைபெற்று வருகிறது.

இதனால் மத்தியப் பிரதேச அரசு கோல்ட்ரிஃப் விற்பனையையும் அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மருந்துகளையும் தடை செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியம், 'இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்தைப் பயன்படுத்த வேண்டாம். இதுகுறித்து விசாரணை நடபெற்று வருகிறது" என்றார்.

கோல்ட்ரிஃப் (Coldrif)
கோல்ட்ரிஃப் (Coldrif)

இந்நிலையில் மத்திய பிரதேச அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இந்த விசாரணையில் இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்தை குழந்தைகளுக்கு எழுதிக்கொடுத்த டாக்டர் சோனி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த மருந்தை தயாரித்த 'Sresan Pharmaceuticals' நிறுவனத்திடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கிறது.

மத்திய பிரதேச அரசும், தமிழ்நாடு அரசும் இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

"சேலம் 'Fake Wedding' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" -வேல்முருகன் காட்டம்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் 'பேக் வெட்டிங்' இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. திருமண விழா ... மேலும் பார்க்க

"நரித்தனம்; கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்!

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க ... மேலும் பார்க்க

``குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துகளை சாப்பிட்ட 11 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டைச் சே... மேலும் பார்க்க

"முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்" - டிடிவி தினகரன்

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அற... மேலும் பார்க்க

"விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்” - சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள், மரங்களின்மாநாடுகளை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்தப்போவதாகத் த... மேலும் பார்க்க

"மணிப்பூர் வேறு கரூர் வேறு; விஜய் மன்னிப்புக் கேட்ட பிறகும் பிரச்னை ஏன்?" - குஷ்பு பேட்டி

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அ... மேலும் பார்க்க