ஜம்மு-காஷ்மீர்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!
111 ரன்களுக்கு சுருண்ட பஞ்சாப்: ரசிகர்கள் அதிர்ச்சி!
கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சண்டீகரில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா அணியில் ஹர்சித் ராணா 3, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளும் வைப் அரோரா, ஆண்ட்ரிச் நார்ட்ஜே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.