யேமனின் முக்கிய விமான நிலையம் முழுவதுமாகத் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம்!
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை எப்படி அறியலாம்?
தமிழகத்தில் மே 8ஆம் தேதி பனிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே வியாழக்கிழமை (மே 8) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் - 2025ல் நடைபெற்ற 2024-25ஆம் கல்வியாண்டுக்கான மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மே 8ஆம் தேதி காலை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9 மணிக்கு வெளியிடுகிறார்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண்கள் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல், மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்தபோது உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தபோது வதுழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நிறைவடைந்த நிலையில், மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றுவிட்டது.
எனவே, தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 9ஆம் தேதிக்கு முன்பே அதாவது மே 8ஆம் தேதியே வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், இணையதளங்களிலும் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.